13 அம்சக் கோரிக்கைகளே ஐ.தே.க.வின் பிளவிற்கு காரணம் ‍- ரோஹித்த

369 0

நாட்டை பிளவுபடுத்தும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் 13 அம்சக் கோரிக்கைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளித்தமையின் காரணமாகவே அந்த கட்சிக்குள் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஐ.தே.க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மோசடிகளுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பத்தரமுல்ல – நெலும்மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.