வீதியை விட்டு விலகி வடிகானில் விழுந்த பஸ்

403 0

மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதியின் ரொக்குட் பகுதியில் தனியார் பஸ் ஒன்று வடிகானில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த பஸ் மஸ்கெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணிகளுடன் பயணித்த போது பஸ் பாதையை விட்டு விலகி வடிகானில் வீழ்ந்துள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் எவரும் காயமடையவில்லை என்றும் ஹட்டன் மஸ்கெலியா போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்துடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டனர்.