இன்று (25) பிற்பகல் 2 மணிமுதல் இரவு 10 மணிவரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் விட்டு விட்டு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடுமையான மின்னல் தாக்கம் இருக்கும் என, காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.