கிளாரி கிளின்டன் வெற்றிபெறவேண்டுமென 1008 தேங்காய் உடைக்கப்போகிறார் சிவாஜிலிங்கம்!

371 0

sivajilingam-1-e1428478304221எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடவுள்ள கிளாரி கினின்டன் வெற்றிபெறவேண்டுமென கோரி நல்லூர் கந்தசுவாமி கோவிலில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு செய்யவுள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம். அத்துடன், அவர் மரியன்னை ஆலயத்திலும் மெழுகுதிரி கொழுத்தி வழிபாடு செய்யவுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம்,

அமெரிக்க அரசாங்கமே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத்தை நிர்மூலமாக்குவதில் முன்னின்று செயற்பட்டது. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இருப்பினும், நிர்க்கதியாகியுள்ள தமிழர்களுக்கு அமெரிக்காவினாலேயே தீர்வினைப் பெற்றுத்தரமுடியும். ஆகையால், தமிழ் மக்களுக்கு ஆதரவாகச் செயற்படும் கிளாரி கிளின்டன் அமெரிக்க அதிபராகத் தெரிவுசெய்யப்பட வேண்டுமென இறைவனிடம் மன்றாடி இந்த வேண்டுதலை நிறைவேற்றவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.