இலங்கை இந்திய மீனவர்களிடையேயான 4ஆம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று இந்தியா புதுடில்லியில் நடைபெற்றது.
பாக்கு நீரிணைப்பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்திய மீனவர்கள் பலர் இலங்கையில் கைதுசெய்யப்பட்டும் வருகின்றனர்.
குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு இதுவரை 3 கட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
எனினும் குறித்த பிரச்சினைக்கு இதுவரைத் தீர்வு காணப்படாத நிலையில், இன்று இந்தியாவில் 4ஆம் கட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இது தொடர்பில் எமக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கை இந்திய மீனவ அமைப்பின் ஆலோசகர் எஸ்.பி.அந்தோனிமுத்து……