சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவினால் புதிய கட்சி, புதிய சின்னம் மற்றும் அதன் தலைவர் ஆகியன தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அபே சிறீலங்கா நிதஹஸ் பெரமுன (எங்கள் இலங்கை சுதந்திர முன்னணி) என முதலில் வைக்கப்பட்ட பெயர் தற்போது சிறீலங்கா பொதுஜன பெரமுன (இலங்கை மக்கள் முன்னணி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழைய கட்சிக்கு வைக்கப்பட்ட மொட்டுச் சின்னமே புதிய கட்சியின் சின்னமாகவும், புதிய கட்சியின் தலைவராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த புதிய கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 18ஆம் திகதி சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் தினத்தில் அறிவிக்கப்படவுள்ளது. அத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலிலும் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அணி போட்டியிடவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.