மஹிந்தவின் புதிய பிரவேசம்! ஐ.தே.க உறுப்பினர்கள் ஆதரவு!!

291 0

mahi-2ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதிய அரசியல் சக்திக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய, மட்டக்களப்பு, காத்தான்குடி ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளர்கள் இவ்வாறு இணைந்து கொள்ளவுள்ளனர்.

இவர்கள் பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிறந்த நாளான நவம்பர் மாதம் 18ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சியின் புதிய அரசியல் நடவடிக்கையினை ஆரம்பிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள அனைத்து தேர்தல் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரே இடத்தில் புதிய அரசியல் நடவடிக்கையின் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த தேர்தல் பிரிவுகளில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்காக 10 லட்சம் உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக அந்த தகவல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது வரையில் அந்த தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை கொண்ட தொகுதி அமைப்பாளர்கள் நியமிப்பட்டுள்ள நிலையில் அவர்களின் தலைமைத்துத்தில் புதிய கட்சி ஆரம்பிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.