இலங்கையில் தொடருந்து பாதை அமைக்க இந்தியா உதவி

5132 36

Tamil_News_large_1528388_318_219இலங்கையில் தொடருந்து பாதைகளை அமைப்பதற்கும், மறுசீரமைப்பதற்கும் மேலதிக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய தொடருந்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து சென்றுள்ள செய்தியாளர்கள் குழு ஒன்றுடன் கலந்துரையாடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையின் வடமாகாணத்தில் 250 கிலோமீற்றர் நீளமான தொடருந்து பாதையை இந்தியா அமைத்துக் கொடுத்துள்ளது.

அத்துடன் கொழும்புக்கும் மாத்தறைக்கும் இடையிலான 114 கிலோமீற்றர் நீளமான பாதை மீள்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்தும் உதவிகளை வழங்க இந்தியா தயாராக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment