பாகிஸ்தானில், பழைய கப்பல் உடைக்கும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர்.
டேங்க், வெடித்தது :
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கதானியில், பழைய கப்பல்களை உடைக்கும் தளம் உள்ளது. அங்கு, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று, கப்பல் ஒன்றை உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் டேங்க், வெடித்து சிதறியது. இதில், தொழிலாளர்கள் பலர் சிக்கினர்; சிலர், கப்பலில் இருந்து கடலில் குதித்து தப்பினர்.
பலர் கவலைக்கிடம்:
மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என, அஞ்சப்படுகிறது.