ஆப்பிள் ஐபோனுக்காக பெயரை மாற்றிக்கொண்ட இளைஞர்

294 0

201611011415022630_man-changes-name-to-iphone-7-to-get-the-apple-smartphone_secvpfஆப்பிள் ஐபோனுக்காக இளைஞர் ஒருவர் பெயரை மாற்றிக்கொண்ட சம்பவம் உக்ரைன் நாட்டில் நிகழ்ந்துள்ளது.உக்ரைன் நாட்டைச்சேர்ந்த எலக்ட்ரானிக் விற்பனையகம் ஒன்று ஐபோன் விற்பனைக்காக புதிய உத்தி ஒன்றைக் கையாண்டது. அதாவது தனது பெயரை ஐபோன் 7 என மாற்றிக்கொள்ளும் முதல் ஐந்து பேருக்கு ஆப்பிள் ஐபோன் 7 மொபைலை இலவசமாக அளிப்பதாகக் கூறியது.

அலெக்சாண்டர் துரின் என்ற 20 வயது இளைஞர் இந்த சவாலை ஏற்றுக்கொள்வதாக கூறி தனது பெயரை ஐபோன் சிம் (சிம் என்றால் உக்ரைன் மொழியில் செவன் என்று அர்த்தம்) என மாற்றிக் கொண்டார். அலெக்சாண்டர் துரின் தனது பெயரை மாற்றிக்கொண்டதைத் தொடர்ந்து அந்த விற்பனையகம் அவருக்கு ஆப்பிள் ஐபோன் 7-ஐ பரிசாக அளித்துள்ளது.

வெறும் 2 டாலர் செலவு செய்து 850 டாலர் மதிப்புள்ள ஆப்பிள் ஐபோனை பரிசாகப் பெற்ற அலெக்சாண்டர் துரின் தனக்கு திருமணமாகி குழந்தை பிறந்த பின்னர் தனது பழைய பெயருக்கு மாறி விடுவேன் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.