மக்களை பலவந்தமாக அனுப்பி கேடயமாக பயன்படுத்துகிறது ஐ.எஸ்- ஐ.நா. தகவல்

269 0

201611012316260106_un-reports-more-civilians-forced-to-mosul-possibly-as_secvpfஈராக்கின் மொசூல் நகருக்கு மக்களை பலவந்தமாக அனுப்பி அவர்களை தற்காப்பு கேடயமாக ஐ.எஸ் அமைப்பு பயன்படுத்துவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.ஈராக் நாட்டில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி மிகப்பெரிய நகரமான மொசூலை கைப்பற்றும் முனைப்பில் அந்நாட்டு படைகள் தீவிரவாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மொசூல் நகரின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள பார்டாலா, பஸ்வாயா, கோக்ஜாலி ஆகிய மூன்று கிராமங்களில், பார்டாலா கிராமத்தை ஈராக்கியப் படையினர் பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.

மேலும் மொசூல் நகரை நோக்கி ஈராக் படைகள் முன்னேறி வருவதாக அந்நாட்டு ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், முன்னேறி வரும் ஈராக் படைகளை தடுக்க  மொசூல் நகருக்கு பொதுமக்களை பலவந்தமாக அனுப்பி அவர்களை தற்காப்பு கேடயமாக ஐ.எஸ் அமைப்பு பயன்படுத்துவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. உரிமை ஆணைய அலுவலக செய்தி தொடர்பாளர் ரவினா ஷாம்தசனி ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-தீவிரவாதிகள் 40 முன்னாள் ஈராக் பாதுகாப்பு  படையினரை கொன்று அவர்களது உடல்களை ஆற்றில் வீசியுள்ளனர்.

ஈராக் படையினர் கடந்த மாதம் தாக்குதலை தொடங்கியது முதல் மொசூல் நகர் மற்றும் அதனை சுற்றிலும் ஆயிரக்கணக்கான மக்களை இடமாற்றியது, நூற்றுக்கணக்கானோருக்கு மரண தண்டனை அளித்தது உள்ளிட்ட ஐ.எஸ் அமைப்பின் செய்த அட்டூழியங்களை ஐ.நா உரிமை அலுவலகம் பட்டியலிட்டுள்ளது.மேலும் ஏராளமான டிராக்டர்கள் மற்றும் மினி பேருந்துகளில் மொசூலின் தெற்கு பகுதியில் உள்ள ஹமம் அல் அலில் நகருக்கு மக்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொண்டு சென்றனர். மொசூல் நகரை சுற்றிலும் 25 ஆயிரம் பொதுமக்களை வலுக்கட்டாயமாக கொண்டு செல்ல அவர் திட்டமிட்டுள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.