எல்லையில் அத்துமீறல் தொடர்பாக இந்திய துணைத்தூதரை பாகிஸ்தான் அழைத்து கண்டனம் பதிவு செய்துள்ளது.காஷ்மீரில் எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய நிலைகள் மீதும், அப்பாவி மக்களை குறி வைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதற்கு இந்தியாவும் தகுந்த பதிலடி தந்து வருகிறது.
இந்த நிலையில் எல்லையில் நிகியால், ஜாண்ட்ராட் பகுதிகளில் 31-ந் தேதி இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் உள்பட 6 பேர் பலியானதாகவும், 8 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்த நாடு கூறுகிறது.
இது தொடர்பாக இந்தியாவுக்கான துணைத்தூதர் ஜே.பி.சிங்கை பாகிஸ்தான் ‘தெற்காசியா மற்றும் சார்க்’ பிரிவின் தலைமை இயக்குனர் முகமது பைசல் நேற்று அழைத்து, கடும் கண்டனம் பதிவு செய்தார்.கடந்த சில நாட்களில் இந்திய துணைத்தூதரை பாகிஸ்தான் அழைத்து கண்டனம் பதிவு செய்திருப்பது இது 4-வது முறை ஆகும்.