ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தினுள் தேசிய பாதுபாப்பிற்கு அடுத்ததாக கல்விக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனூடாக நாட்டினுள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் இன்று (22) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் தற்போதும் அநேகமான பாடசாலைகளின் வகுப்பறைகள் 19 ஆம் நூற்றாண்டையும், ஆசிரியர்கள் 20 நூற்றாண்டையும் சேர்ந்தவர்களாகவும் காணப்படுவதாக தெரிவித்த அவர், 21 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வியை பெற்றுக் கொடுக்கும் போது அது நெருக்கடியை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
இந்த நிலைமையினை ஆழமாக ஆராய்ந்து அதற்கு தீர்வினை காண வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.