பெண் பாதிரியார்கள் மீதான தடையில் என்றைக்கும் சமரசம் இல்லை- போப் பிரான்சிஸ்

265 0

201611020537119743_pope-francis-says-he-believes-ban-on-female-priests-is_secvpfபெண் பாதிரியார்கள் மீதான தடையில் என்றைக்கும் சமரசம் இல்லை, அதனை முழுமையாக ஏற்கிறேன் என்று போப் பிரான்சிஸ் உறுதியாக தெரிவித்துள்ளார்.ஸ்வீடன் நாட்டில் இருந்து ரோம் நகருக்கு திரும்பிய போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் போப் பிரான்சிஸ் பேசினார்.
அப்போது இனி வருங்காலங்களில் கத்தோலிக்க திருச்சபையின் நிர்வாக பொறுப்புகளில் பெண்கள் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக என்று கேட்டனர்.

அதற்கு, “1994-ம் ஆண்டு போப் ஜான் பாலின் ஆவணத்தில் பெண் பாதிரியார்களுக்கான கதவு மூடப்பட்டுள்ளதை நான் சுட்டிக் காட்டுகிறேன். தூய போப் ஜான் பால் -2 ஏற்கனவே தன்னுடைய வார்த்தைகளில் தெளிவாக கூறியுள்ளார். அது தான் என்னுடைய கருத்தும்” என்று தெரிவித்தார்.

மீண்டும் நிரூபர்கள், “ஆனால் எப்பொழுதும், எப்பொழுதுமா? இல்லவே இல்லையா? என்று அழுத்தமாக கேட்டனர்.அதற்கு பதிலளித்த போப் பிரான்சிஸ், “தூய இரண்டாம் ஜான் பால் ஆவணத்தை நாம் கவனமாக படித்தால் அது நமக்கு வழிகாட்டும்” என்றார்.

பெண்கள் பாதிரியார்களாக ஆக முடியாது என்று கத்தோலிக்க திருச்சபை போதிக்கின்றது. ஏனெனில் ஏசு கிறிஸ்து ஆண்களை மட்டும் தான்னுடைய தூதுவர்களாக தேர்வு செய்ய விரும்பினார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக கிறிஸ்தவ வரலாற்றில் பெண் திருத்தொண்டர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள கடந்த ஆகஸ்ட் மாதம் போப் பிரான்சிஸ் கமிஷன் ஒன்றினை அமைத்தார். இதனால் 1.2 பில்லியன் உறுப்பினர்களை  கொண்ட ரோம் திருச்சபையில் ஒரு நாள் பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.