அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி. விடுதியில் ஜப்பான் மாணவர் தூக்கிட்டு தற்அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி. விடுதியில் ஜப்பான் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள சில கல்லூரி மற்றும் ஐ.ஐ.டி.களில் வெளி மாநிலங்களில் இருந்து படிப்பதற்காக வந்து விடுதிகளில் தங்கும் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
ஜப்பானில் உள்ள ஜிஃபு பல்கலைக்கழகத்தை சேர்ந்த கோட்டா ஓனோடா(22) என்ற அந்த மாணவர் ‘இன்ட்டெரிம்’ எனப்படும் பணி அனுபவ பயிற்சிக்காக கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் சேர்ந்திருந்தார். அவரது பயிற்சிக் காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் விடுதியின் குளியலறையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
ஐ.ஐ.டி. நிர்வாகம் அளித்த தகவலையடுத்து விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.