சிறீலங்கா தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படவேண்டும்!

254 0

eu-deligates-tnaஅனைத்துலகுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறீலங்கா நிறைவேற்றியதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதன் பின்னரே ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீள வளங்கவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியக் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீள வழங்குவது தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போதே இரா.சம்பந்தனால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு நாம் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதனை நாம் வரவேற்கின்றோம்.

இருப்பினும், அனைத்துலகத்துக்கு சிறீலங்கா வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும்.

இந்த வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை அனைத்துலக சமூகம் அவதானிக்க வேண்டும்.

சிறீலங்கா புதிய திசையொன்றை நோக்கிப் பயணிக்கின்றது என்பதை நாம் அறிவோம். எனினும், இது எந்தளவு தூரம் சரியாக செல்கிறது என்பதை முழுமையாக ஆராய்ந்து மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீள வழங்குவதாக இருந்தால், சிறீலங்காவை தொடர்ச்சியான கண்காணிப்புக்குட்படுத்தும் பொறிமுறையொன்றை உருவாக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.