பிரதமர் ஹொங்கொங் செல்கிறார்

322 0

ranil-0-0இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் ஹொங்கொங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

ஜெர்மன் ஆசிய பசுபிக் வர்த்தக சர்வதேச சம்மேளனத்தின் 15வது அமர்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் ஹொங்கொங் செல்கிறார்.

இந்த அமர்வுகளின் பிரதான உரையை பிரதமர் ஆற்றவுள்ளதுடன், நாளை முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் ஹொங்கொங் மாநாடு நடைபெறவுள்ளது.

1986ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.