முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.
சதொச நிறுவனத்தின் பணியாளர்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதாக அவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட மூன்று பேரும், தலா 50 ஆயிரம் ரூபாய் றொக்க பணம் மற்றும் 50 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்ணாண்டோ மற்றும் அதன் செயற்பாட்டு பணிப்பாளர் மொஹட் சஃபீர் ஆகியோரே ஏனைய இருவருமாவர்.