மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் நாளை நாடு திரும்ப உள்ளார்.
நெருங்கிய நண்பர் ஒருவரின் மகனது திருமண வைபவத்தில் பங்கேற்பதற்காக அர்ஜூன் மகேந்திரன் கடந்த 27ஆம் திகதி இந்தோனேசியாவின் ஜகர்த்தாவிற்கு சென்றிருந்தார்.
திருமண வைபவத்தில் பங்கேற்கச் செல்வதாக பிரதமரிடம், அர்ஜூன் மகேந்திரன் அறிவித்திருந்தார்.
மத்திய வங்கி முறி மோசடிகள் குறித்து கோப் குழு அறிக்கை வெளியிடப்பட முன்னதாக அர்ஜூன் மகேந்திரன் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியிருந்தது.
எனினும், ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே நண்பருக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தாம் ஜகார்த்தா சென்றதாக அர்ஜூன் மகேந்திரன் கூறியுள்ளார்.