நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட இராணுவம் வெளியேற வேண்டும் – சீ.வி விக்னேஸ்வரன்

291 0

hqdefaultநாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் வட பகுதியில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் கொழும்பில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்து ஆலோசித்துள்ளனர்.

இலங்கையில் தற்போதிருக்கும் நல்லிணக்கம் தொடர்பாகவும் ஆண், பெண் சமநிலை பற்றியும் பெண்களுக்கான வலுவூட்டல் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

நல்லிணக்கத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதானால், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த அரசாங்கம் முன்வர வேண்டும்.

போர் முடிந்து 7 வருடங்களின் பின்னரும் வடக்கில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினரை நிலைகொள்ளவைத்திருப்பது நல்லிணக்கத்திற்குத் தடையாகவே இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.