ஆவா என்ற பெயரில் செயற்படுவது விடுதலைப் புலிகளே – பொதுபலசேன

327 0

ganasara_2யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் வாள் வெட்டு மற்றும் சமூக விரோத செயற்பாடுகளில் ஆவா என அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ள பாதாள குழு ஒன்று செயற்படுகின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களே இவ்வாறு ஆவா என்ற பெயரில் செயற்படுவதாக பொதுபலசேனா குற்றம் சுமத்தியுள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 20ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் துப்பாகி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சில பேராசிரியர்கள் உள்ளிட்டவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக உளவு பிரிவின் தலைவரை நீக்க வேண்டும் என பேராசிரியர் சரத் விஜேசூரிய கூறியுள்ளார். எனினும், உளவு பிரிவின் தலைவர் ஒரு இனவாதி கிடையாது.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாட்டில் வெடிச்சத்தம் இல்லாது, மக்களை பாதுகாத்தது உளவு பிரிவினரே என அவர் குறிப்பிட்டுள்ளார்.