நாட்டில் அனைத்து புற்று நோயாளிகளுக்கும் வாழ்நாள் முழுதும் இலவச மருத்துவ சேவையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட சுகாதார அலுவலகத்திற்கு புதிதாக 14 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடமொன்றை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வித அச்சுறுத்தலும் இன்றி எதிர்காலத்தில் சுயாதீன சுகாதார சேவையினை கொண்டு செல்லகூடிய தன்மை நல்லாட்சியின் மூலம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.