யாழ் பலாலி வீதியிலுள்ள உணவக உரிமையாளர்மீது வாள்வெட்டு

358 0

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81யாழ்ப்பாணம் பலாலி வீதி யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள சிறு உணவகம் ஒன்றினுள் புகுந்த ஆயுததாரிகள் கடை உரிமையாளர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

முகங்களிற்கு கறுப்புத் துணியால் கட்டியவாறு ஒரு மோட்டார் சைக்களில் வந்ததாகக் கூறப்படும் மூன்று நபர்களே குறித்த கடைக்குள் புகுந்து கடை உரிமையாளர் மீது வாள் வீச்சினை மேற்கொண்டு உள்ளனர்.

இதன்போது சுதாகரித்துக்கொண்ட கடை உரிமையாளர் கடையினுள் இருந்து சிறிய ஸ்ரூல் ஒன்றினை வாளிற்கு எதிராகக் கொடுத்து வாள் வீச்சினை தடுத்துள்ளதாகவும், இதனால் கடை உரிமையாளர் பாரிய காயமின்றி தப்பிக் கொண்டார்.

இருந்த போதிலும் தாக்குதலாளிகள் வாள் வீச்சினை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பி செல்லும்போது கடையில் இருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.