மாங்குளம் வைத்தியசாலைக்கு மகப்பேற்று மருத்துவத்தாதி இல்லை

359 0

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8dமுல்லத்தீவு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று மருத்துவ தாதி இடமாற்றலாகி சென்று ஆறு மாதங்கள் கடந்த நிலையில் பதில் மருத்துவ தாதி இதுவரை நியமிக்கப்படாமையால் மகப்பேற்று சிகிச்சை பிரிவு முற்றாக செயலிழந்துள்ளதாக குறித்த வைத்தியசாலையின் கீழுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் கீழ் 18 கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன.

இந்நிலையில் புத்துவெட்டுவான் ஐயங்கன்குளம் அம்பகாமம் புலுமச்சி நாதகுளம் ஆகிய போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராம மக்கள் இவ்வைத்தியசாலையை பெரிதும் நம்பிவாழ்வாதாக தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் இக்கிராமங்களின் கர்ப்பிணித்தாய்மார் தமது குழந்தைகளை மாங்குளம் ஆதார வைத்தியசாலையிலேயே இதுவரை பிரசவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது மகப்பேற்று சிகிச்சைப்பிரிவு மருத்துவ தாதி இல்லாத நிலையில் செயலிழந்துள்ளமை பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதுடன் எதிர்காலத்தில் கர்ப்பிணித்தாய்மாரின் உயிரிழப்புக்களும் ஏதுவாக அமைந்து விடுமோ என பிரதேச மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

எனவே வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மத்திய சுகாதார அமைச்சு இது தொடர்பில் கவனம் செலுத்தி மகப்பேற்று தாதியொருவரை நியமித்து தர நடவடிக்கை மேற்கொண்டு உதவ வேண்டுமென பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர்.