கருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை

224 0

முன்னாள் பிரதி அமைச்சருமான  வினாயகமூர்த்தி முரளிதரன் முஸ்லிம்களை இலக்கு வைத்து வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் தலைமையகத்துக்கு தேர்தல்கள் ஆணைக் குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்  அனுப்பியுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு பொலிஸ் தலைமையகத்தினால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.