கிளி.கண்டாவளை புன்னைநீராவி கிராமத்தில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை-மக்கள் குற்றச்சாட்டு

401 0

%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%beகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள புன்னைநீராவி கிராமத்தின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள புன்னைநீராவி கிராமத்தில் மக்கள் தமக்கான அடிப்படை வசதிகள் எவையும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்றும் இவற்றை ஏற்படுத்தித்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது இக்கிராமத்தின் பிரதான வீதி முதல் ஏனைய குடியிருப்பு வீதிகள் வரை ஏராளமான வீதிகள் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.

இதனால் பருவ காலமழை காலங்களிலும் ஏனைய காலங்களிலும் பயணிக்கமுடியாத நிலையில் காணப்படுகின்றன.

குறிப்பிட்ட சில வீதிகள் வெள்ளநீர் வழிந்தோடும் வாய்க்கால் போன்று காணப்படுகின்றன இதனூடாக பயணிக்கமுடியாத நிலையில் காணப்படுகின்றது.

அத்துடன் ஏராளமான குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அத்துடன் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் தமக்கான வாழ்வாதாரத் தொழில்கள் இல்லாது அன்றாட உணவிற்கே அல்லற்படும் நிலை காணப்படுகின்றது.

இவர்களின் எதிர்காலம் குறித்து உரிய உதவிகளை பெற்றுத்தருமாறும் தொழில் வாய்பின்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி தருமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.