முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் 4 குளங்களைப் புனரமைக்க மக்கள் கோரிக்கை  

375 0

 

%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9fமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஒதியமலை பிரதேசத்தில் உள்ள நான்கு குளங்களைப் புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஒதியமலைக்கிராமத்தில் காணப்படும் கருவேப்பமுறிப்பு செம்பிக்குளம் பளையமுறிப்பு மற்றும் தனிக்கல்லுக்குளம் ஆகிய நான்கு குளங்களையும் விரைவாக புனரமைத்து தருமாறு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 1984ம் ஆண்டு ஒதியமலை பகுதியில் அப்பாவி மக்கள் கொலைசெய்யப்பட்டதையடுத்;து இப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் மீளவும் கடந்த 2010ம் ஆண்டின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து தாங்கள் இக்கிராமத்தில் மீள்குடியேறியுள்ள நிலையில் தமது வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தை மேற்கொள்ளும் வகையில் இவ்வாறு காணப்படும் குளங்களை புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் இப்பகுதியில் பயிர் செய்கைகளை பாதுகாப்பது முதல் இரவு வேளைகளில் வீடுகளில் இருக்கமுடியாத அளவிற்கு காட்டுயானைகளின் தொல்லையும் அதிகரித்துக் காணப்படுகின்றது என்றும் இதனை கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலிகள் அமைத்து தரவேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்னளர்.