இரண்டாம் உலக போரில் யூதர்கள் தப்பிய சுரங்கம் கண்டுபிடிப்பு

2739 0

1467260748_3256257_hirunews_tunnelஇரண்டாம் உலக போரின் போது யூத கைதிகள் தப்பி செல்வதற்காக, அவர்களால் கரண்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நிலக்கீழ் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாசி படையினரால் இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் லட்சக்கணக்கான யூதர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் எஞ்சியிருந்த யூத கைதிகள், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த கரண்டிகளைக் கொண்டு நிலத்துக்கு கீழ் சுரங்கத்தை தோண்டி தப்பிச் செல்ல முற்பட்டனர்.

34 மீற்றர் அளவான இந்த சுரங்கத்தின் ஊடாக வெளியேறிய 11 பேர் யுத்தத்தில் உயிர் தப்பினார்கள்.

இந்த சுரங்கம் குறித்த தகவல் நீண்டகாலமாக அறியப்படாதிருந்தது.

இந்த நிலையில் தற்போது லித்துவேனியாவின் பொனார் காட்டுப்பகுதியில் இந்த சுரங்கத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Leave a comment