முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேசத்தில் ஆறாயிரத்து 439 காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கப்பட்டுள்ளதாக கரைதுரைப்பற்றுப்பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கரைதுரைப்பற்றுப்பிரதேச செயலர் பிரிவில் இதுவரை ஆறாயிரத்து 439 பேருக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் ஏற்கவே இருந்த அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்து வழங்குகின்ற அடிப்படையில் ஆயிரத்து 77 பேருக்கான அனுமதிப்பத்திரங்கள் புதுப்பித்து வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை கரைதுரைப்பற்றுப்பிரதேசத்தில் 168 காணிக்கச்சேரிகள் நடத்தப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.