சொந்த மண்ணில் சொந்த மரங்களை நாட்டுவோம் என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாணசபையின் இவ்வாண்டிற்கான மரம் நாட்டும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கிளிநொச்சி இரணைமடு இடதுகரை வாய்க்கால் வீதியில் தொடக்க நிகழ்வை மரம் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.
வடக்கு மாகாணசபையினால் நவம்பர் மாதம் 30ஆம் திகதிவரை மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு இன்றையதினம் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம் என்னும் தொனிப்பொருளில் இவ்வாண்டிற்கான மரம் நடுகை நிகழ்வு நடைபெற்றது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.
மரம் நாட்டுவதன் அவசியம் தொடர்பான கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.