அரசியல் வாழ்வில் கொடிகட்டிப்பறந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தற்போது பல்வேறு வகையாக விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
அண்மையில் அவரது வீட்டில் மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் மரணமாகி இருந்தமையே அதற்கான காரணமாகும்.
குறித்த மரணமானது இயற்கையாக நிகழ்ந்தது அல்ல என மருத்துவ அறிக்கை குறிப்பிட்ட போதும், உயிரிழப்புக்கான காரணங்களும் விசாரணைகளும் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றது.
தற்போது மரணம் தொடர்பில் புதிய ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளது. விமல் வீட்டில் மர்மான முறையில் உயிரிழந்த லஹிரு ஜனித் திஸாநாயக்கவின் நெருங்கிய நண்பர் ஒருவர் புதுத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தானும், விமலின் மகனும், லஹிருவும் மிக நெருக்கமான நண்பர்கள். மூவரும் ஒன்றாகவே இருந்தோம் எனவும், லஹிருவிக்கும் விமல் வீரவன்சவின் மகளுக்கும் ஏற்கனவே காதல் தொடர்பு இருந்ததாகவும் அதன் காரணமாக விமலின் மகனான விபுதி விஷ்வஜிதவிற்கும் ஏற்கனவே முரண்பாடுகள் காணப்பட்டதாகவும், பகை இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் லஹிருவின் தொலைபேசி மற்றும் அவருடைய முகநூல் கணக்குகளை பரிசோதிக்க வேண்டும். ஆனால் அவை முறையாக நடைபெற வில்லை. இது வரையிலும் அவை இருக்கின்றதா? என்பது சந்தேகமே.
லஹிருவும் எம்மைப்போலவே ஒருவர். அவருக்கு எந்தவகையிலும் இவ்வாறான மரணம் ஏற்பட வாய்ப்பு இல்லை. அவர் நல்ல திடகாத்திரமாகவே இருந்தார். அவர் மரணமான தினம் ஏதோ நடந்திருக்கின்றது.
சஷி வீரவன்ச தெரிவித்துள்ள கருத்துகளை பார்க்கும் போது எனக்கு சந்தேகமாக உள்ளது. அதனால் முறையான விசாரணைகள் இடம் பெற வேண்டும் எனவும் மரணமடைந்த இளைஞரின் நண்பர் தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஏற்கனவே செய்திகள் வெளிவந்திருந்தாலும், அவை மூடிமறைக்கப்பட்ட நிலையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணைகள் தொடரப்படுமா..? என்பது சந்தேகமே.
இதேவேளை, விமலை காப்பாற்ற பிரபல அமைச்சர் ஒருவர் பின்னணியில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.