துருக்கி விமானநிலைய தாக்குதலில் காயமடைந்த 41 பேர் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலை அடுத்து, அந்த நாட்டின் தேசிய துக்கதினம் அனுஸ்டிக்கப்படுகிறது.
துருக்கியின் முக்கிய விமான நிலையமான அதாடர்க்கில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இதில் 41 பேர் பலியாகினர்.
அவர்களில் 13 பேர் வெளிநாட்டவர்கள்.
மேலும் நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 41 பேர் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகளே நடத்தியதாக, துருக்கியின் பிரதமர் பினாலி யில்டிறிம் தெரிவித்துள்ள போதும், ஐ.எஸ். தீவிரவாதிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.