நெடுந்தீவு கடற்பரப்பின் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வருவதற்கு முற்பட்ட 1.2 மில்லியன் பெறுமதியான 80 கிலோக்கிராம் கோரள கஞ்சாவுடன் 4 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேளை அவர்களை 6 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி, கஞ்சா கடத்தல் தொடர்பில் விசாரணை அறிக்கையினை மன்றில் சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து மன்னாருக்கு கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சாவின் ஒரு தொகுதி நெடுந்தீவு கடற்பரப்பினால் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான முயட்சிகள் மேற்கொள்ளப்படுவதாக விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலின் அடிப்படையில் கடற்படையினருடைய உதவியுடன் விசேட அதிரடிப் படையினர் கடலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதன் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த படகு ஒன்றினை விசேட அதிரடிப் படையினர் சோதணையிட்ட வேளை அதில் கஞ்சா பொலிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து படகில் வந்த 4 பேரையும் விசேட அதிரடிப் படையினர் கைது செய்ததுடன், கஞ்வாப் பொதியினையும் மீட்டுள்ளனர்.
இதன் பின்னர் ஊர்காவற்றுறை பொலிஸாரின் ஊடாக கைது செய்யப்பட்டவர்களையும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களையும் இன்று செவ்வாக்கிழமை நீதிமன்றத்தில் பாரப்படுத்தியிருந்தனர்.