கோப் குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை ஐக்கிய தேசியக் கட்சி அமுல்படுத்தும் என அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். கேகாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கோப் குழுவின் தலைவராக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் செயற்படுவதற்கான முனைப்புக்களை ஐக்கிய தேசியக் கட்சியே மேற்கொண்டது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒருபோதும் குற்றம் இழைப்பவர்களை பாதுகாக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் மத்திய வங்கியின் ஆளுனராக கடமையாற்றிய அஜித் நிவாட் கப்ரால் மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.