மாணவர்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வன்முறைகளில் ஈடுபடக் கூடாது என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெற்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வன்முறைகளில் ஈடுபடுவதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழர்களினால் எதனையும் வெற்றிகொள்ள முடியாது எனவும் இவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் சமூகத்தைப் பாதிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு சூழ்நிலையிலும் வன்முறையை கையில் எடுத்து விடக்கூடாது என்றே மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் தமது கட்சி சிறு கூட்டங்களை நடத்தி மாணவர்களை தெளிவுபடுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.