தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் மற்றும் சாவி கோர்ப்பான்கள் வைத்திருந்த பெண் நாடு கடத்தப்பட்டுள்ளார். ஜெர்மன் குடியுரிமை பெற்றுக்கொண்ட இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட குறித்த பெண்ணை அண்மையில் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
குறித்த பெண்ணை நாடு கடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகல உத்தரவிட்டார். மலர்விழி விஸ்வராஜ் என்ற பெண்ணே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். இந்தப் பெண்ணின் பெற்றோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டிருந்தார்கள் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.