லெபனான் அதிபராக மைக்கேல் ஆவுன் அந்நாட்டு பாராளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அதிபரை தேர்வு செய்வதற்கான 19 மாத கால இழுபறி முடிவுக்கு வந்தது.
லெபனானில் அதிபர் மைக்கேல் சுலைமானின் ஆட்சி கடந்த மே மாதம் 25 ந் தேதியுடன் முடிவடைந்தது. எனினும், அவருக்கு அடுத்தபடியாக அந்தப் பதவிக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் பல்வேறு கட்சியினரிடையே கருத்து வேறுபாடு நிலவியதால், நாடாளுமன்றத்தில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், லெபனான் அதிபராக அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி மைக்கேல் ஆவுன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அதிபரை தேர்வு செய்வதற்கான 19 மாத கால இழுபறி முடிவுக்கு வந்தது.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இதற்கான வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 128 உறுப்பினர்களில் 83 பேர் ஆவுனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.லெபனான் நாட்டில் அதிக அளவில் கிறிஸ்தவர்கள் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லீம்கள் உள்ளனர்.
இதனால் ஒரு அதிகார பரவலான ஒரு அமைப்பு லெபனான் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. லெபனான் அதிபர் எப்பொழுதும் கிறிஸ்தவராக இருப்பார். பிரதமர் சன்னி முஸ்லீமாகவும், சபாநாயகர் ஷியா முஸ்லீம் பிரிவை சேர்ந்தவராகவும் இருப்பார்கள்.அதிபர் தேர்வானது சன்னி பிரிவு முஸ்லீம்களால் தடை ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிரியா மற்றும் இஸ்ரேல் எல்லைப் பகுதியில் லெபனான் உள்ளதும் ஒரு முக்கியமானதாக கருதபட்டது.