தி.மு.க. வேட்பாளர் சரவணன் வேட்பு மனு தாக்கல்

283 0

201610311322541128_dmk-candidate-saravanan-nomination-filed-for_secvpfதிருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சரவணன்  வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார்.

இவர் இன்று மதியம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருநகர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஜீவாவிடம் மனு தாக்கல் செய்தார்.

பின்னர் சரவணன் அதிகாரி முன்னிலையில் உறுதி மொழி எடுத்து கொண்டார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி கனிமொழி மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக தி.மு.க. வேட்பாளர் சரவணன், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஹார்விபட்டியில் இருந்து ஊர்வலமாக தாலுகா அலுவலகத்துக்கு வந்தார்.