பிரேசில் நாட்டின் தென்பகுதியில் டேங்கர் லாரியுடன் பஸ் நேருக்குநேர் மோதிய விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரேசில் நாட்டின் தென்பகுதியில் உள்ள பரானா மாநிலத்தில் சுமார் 30 பயணிகளுடன் பிரதான நெடுஞ்சாலை வழியாக நேற்று சென்ற ஒரு பஸ்சின்மீது எதிர்திசையில் வேகமாக வந்த ஒரு டேங்கர் லாரி பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சிக்கிய பஸ் தீக்கிரையான நிலையில் சம்பவ இடத்திலேயே 19 பேர் பலியாகினர். விபத்தில் காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் மேலும் ஒருபெண் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை இருபதாக உயர்ந்துள்ளது.