இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பினரின் பிரதிநிதிகளை சந்தித்கவுள்ளனர்.
நாடாளுமன்றத்திலுள்ள எதிர்கட்சித் தலைவரது அலுவலகத்தில் இன்றைய தினம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
நான்கு நாள் உத்தியோகபூர்வ வியத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த ஐரோப்பிய நாடாளுமன்றப் பிரதிநிதிகள் எதிர்வரும் வியாழக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளை அவர்கள் சந்திக்கவுள்ளனர்.
இதேவேளை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கும் அவர்கள் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள சிவில், அரச பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர்.
அதுமட்டுமன்றி மீள்குடியேறியுள்ள மக்களையும் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கு ஜேன் லெம்பர்ட் தலைமை வகிக்கின்றார்.
நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை நிலவரங்களை மறுபரிசீலனை செய்வதற்காக இந்தக் குழு இலங்கை வந்துள்ளது.