குற்றவாளிகளுக்கு தண்டனை ஒத்துழைப்பதற்கு சுதந்திரக் கட்சி முடிவு

316 0

slfp_777eமத்திய வங்கியில் இடம்பெற்றுள்ள பிணை, முறிகள் விற்பனை மோசடி தொடர்பாக கோப் குழுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஒத்துழைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கூர்ந்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்றைய தினம் கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்ட பிணை, முறிகள் விற்பனையில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பாக கோப் குழுவின் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக இந்த சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.