இறக்காமம் புத்தர் சிலை வெறும் எல்லை கல்லே – அமைச்சர் ஹக்கீம்

319 0

m2அம்பாறை மாவட்டத்திலுள்ள இறக்காமம் மாணிக்கமடு கிராமத்தில் வலுக்கட்டாயமாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை, கௌரவமான மதச் சின்னமாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பௌத்த மக்களற்ற குறித்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை, வணக்க வழிபாட்டுக்கான ஒன்றாக பார்க்க முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறக்காமம் மாணிக்கமடு கிராமத்தில் புதிதாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

பௌத்த மக்களே இல்லாத பூர்வீகத் தமிழ் கிராமத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பில் கிராம மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ள நிலையில், அங்கு இராணுவத்தினரும், பொலிசாரும் பெருமளவில்குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்தே பதற்ற நிலை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.