பிரபாகரன் படை உருவாக அரசே காரணம் – மஹிந்த

314 0

mahindaமைத்ரி – ரணில் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறையின்மையே யாழில் பிரபாகரன் படை என்ற பெயரில் புதிய குழுக்கள் உருவாவதற்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் நாட்டின் தேசிய பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தென்பகுதியிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு சுதந்திரமாக செல்வதற்கு முடியாத நிலமை விரைவில் ஏற்படும் என்றும் மஹிந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவௌ பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே மஹிந்த, அரசாங்கத்தின் மீது இந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கின்றார்.