அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசியல் ஒருங்கிணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் ஐ.நா வில் ஆற்றிய உரை

2262 0

ஜெனீவா மனித உரிமை பேரவையில் நடைபெற்றுவரும் 32ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேற்றைய தினம் வாய்மூல அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார்.இது தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசியல் ஒருங்கிணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில் இன்றைய தினம் 30-06-2016 அன்று ஆற்றிய உரையில் , பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்.IMG_8611

ஐநா மனித உரிமை பேரவையில் தொடர்ச்சியாக பல முறைகள் இலங்கை தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் தமிழர் தாயகத்தில் இன்றும் பல்வேறு வகையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் , தமிழர்கள் காணிகள் அபகரிப்பு , தமிழர் தாயகத்தில் சிங்கள ராணுவ பிரசன்னம் ,இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த நிலத்தில் மீள் குடியேற முடியாதநிலை என்கிற பல விடயங்களில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இவ் அனைத்து குற்றங்களையும் இழைத்த சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் உள்ளக நீதி விசாரணை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எக்காலமும் நீதியை நிலைநாட்டாது என்றும் , இப்பொறிமுறையில் தமிழ் மக்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என்றும் , பன்னாட்டு சுயாதீன விசாரணை ஒன்றே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும் என்பதை தனது உரையில் திரு திருச்சோதி அவர்கள் வலியுறுத்தினார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடர் காலப்பகுதியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையால் ஜெனிவா மாநகரில் ஒழுங்குசெய்யப்பட்டு நிகழ்த்தப்பட்ட பத்திரிகை மாநாட்டிலும் அனைத்துலக சுயாதீன விசாரணை மையப்பொருளாக வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment