எஸ்.பி. திஸாநாயக்கவின் இரு மெய் பாதுகாவலர்களும் கைது!

283 0

கினிகத்தேனையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவின் மெய் பாதுகாகவலர்கள் இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க பயணித்த வாகனத்தை கினிகத்தேனை, பொல்பிட்டிய பகுதியில் தடுத்த கும்பல் ஒன்றை கலைப்பதற்காக அவரின் மெய் பாதுகாவலர்கள் இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதன்போது இருவர் படுகாயமடைந்து, தெலிகம வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந் நிலையிலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.