2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் பல்வேறு துன்புறுத்துல்களுக்கு உள்ளான, 78 ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
துன்புறுத்தல்களுக்கு இலக்கான ஊடகவியலாளர்களுக்கான நட்டஈடு வழங்குவது தொடர்பில், நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமைய, 78 ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன முன்வைத்த கோரிக்கைக்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு, இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.