ஈழக்கொடியை உயர்த்திய வரதராஜப்பெருமாள் போன்றவரல்ல சம்பந்தன் – மரிக்கார்

370 0

கோத்தாபாய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார மேடையில் தனி ஈழக்கொடியை உயர்த்திய வரதராஜப்பெருமாள் நிற்கிறார். அவர் மாத்திரமன்றி பிள்ளையான், கருணா அம்மான், ஹிஸ்புல்லா, அப்துல் ராசிக் போன்றோரும் நிற்கின்றனர். ஆனால் எமக்கு ஆதரவு வழங்கியிருக்கும் சம்பந்தன் வரதராஜப்பெருமாள் போன்றவர் அல்ல. அவர் நாட்டின் தேசியகீதம் ஒலிக்கையில், அதற்கு எழுந்துநின்று மரியாதை அளிப்பதுடன், ஒருமித்த நாட்டை ஏற்றுக்கொண்டவராவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

 

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியில் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சில ஊடகங்கள் பெரிதும் பக்கச்சார்பாக செயற்படுவதைக் காணமுடிகிறது. அவ்வாறு செயற்படும் தனியார் ஊடகமொன்றை இனிவரும் காலங்களில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களுக்கு அனுமதிக்காமல் எமது எதிர்ப்பை வெளியிடவுள்ளோம்.

அதேபோன்று எவ்வித ஜனாதிபதித் தேர்தல் விளம்பரங்களையும் வழங்காமல் இருப்பதற்கும் தீர்மானித்திருக்கிறோம். எனினும் எதிர்காலத்தில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அதேவேளை, அதனைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டியிருக்கும் என்றும் கூறிக்கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.