நீண்ட கால தாமதத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கனடாவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு பெல்ஜியம் எதிர்ப்பை தெரிவித்ததன் காரணமாக ஒப்பந்தம் கைச்சாத்தாவதில் இழுபறிநிலை ஏற்பட்டிருந்தது.
தற்சமயம் அந்த நிலை அகற்றப்பட்டதனை அடுத்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பிரசில்சில் இடம்பெற்ற நிகழ்வில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஜூன் குளோடியோ ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.