இந்தியாவின் போபால் சிறையில் இருந்து தப்பிச் சென்ற எட்டு சிமி திவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
இந்திய மத்திய பிரதேச நகரான போப்பாலில் உள்ள சிறைகூடத்தில் இருந்து அதன் அதிகாரியை கொலை செய்துவிட்டு குறத்த 8 கைதிகளும் இன்று காலை தப்பியோடினர்.
தப்பிச் சென்றவர்கள் இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர்கள் போபாலில் இருந்து எட்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் பதுங்கி இருந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 2003 ஆண்டு 50 பேரை காவுகொண்ட மும்பாய் குண்டு வெடிப்புடன், தொடர்பு கொண்ட சிமி அமைப்பை சேர்ந்தவர்களே கொல்லப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஏற்கனவே கடந்த 2003ஆம் ஆண்டிலும் இதே சிறைச்சாலையில் இருந்து 6 சிமி என்ற மாணவ இஸ்லாமிய தீவிரவாதிகள் உட்பட 7 கைதிகள் தப்பிச் சென்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.