புகையிலை, மதுபானம் மற்றும் ஏனைய போதைப் பொருட்களின் ஆதிக்கம் இல்லாத வாழ்க்கையை இலங்கை மக்களுக்கு ஏற்படுத்துக் கொடுப்பதே தமது அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஆரம்பமான போதைப் பொருள் தடுப்பு சர்வதேச மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
போதைப் பொருட்களை ஒழிக்க அரசாங்கம் சிறந்த செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
தாம் சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியிலும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இலங்கையை போதைப் பொருள் இல்லாத நாடாக மாற்றுவதே தமது இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.